India

நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நிர்பயா பாலியல் குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் நால்வரின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி நிர்பயா ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இன்னொரு குற்றவாளி ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதில் மூன்று பேரின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

நான்காவது குற்றவாளியான அக்‌ஷய்குமார் சிங் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரின் வழக்கறிஞர் இன்று நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன்னால் வாதாடினார்.

 

 

அவர் கூறுகையில், இந்த வழக்கில் பல்வேறு உண்மைகளை முன் வைக்க விரும்புகிறேன். இந்த வழக்கில் அக்ஷய் குமார் சிங் சிக்க வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் .ராம் சிங்கின் தற்கொலை குறித்த புத்தகம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என கூறினார்.

இதற்கு நீதிபதி அசோக் பூஷன் கூறுகையில், இது தவறான போக்கு, விசாரணை முடிந்த வழக்கு குறித்து சந்தேகங்களைக் கொண்டு புத்தகம் எழுதுவதா? என கேள்வியெழுப்பினார். பின்னர் நீதிபதி சீராய்வு மனு தொடர்பில் அளித்த தீர்ப்பில், அக்ஷய் குமார் சிங்கின் சீராய்வு மனு தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

இதன்மூலம் நால்வரின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகளை எப்போது தூக்கிலிட வேண்டும் என்ற திகதியை அறிவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது, மேலும் இந்த வழக்கு அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் நிர்பயாவின் தாய் கூறுகையில், குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top