நியூயோர்க் நகரின் வடக்கே உள்ள யூதர் வழிபாட்டு தலமொன்றில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவமானது அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிக்கு ஏராளமான அவசர சிகிச்சைப் பிரிவு வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நியூயோர்க் நகரத்திலிருந்து 35 மைல் வடக்கே சுமார் 18,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட மொன்சியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.