News

நேபாளத்தில் வங்கிகளில் கைவரிசையைக் காட்டிய 122 சீனர்கள் கைது!

நேபாளத்தில் இணையதளம் மூலம் வங்கி கணினிகளில் ஊடுருவியதாக 122 சீனர்கள் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கடந்த திங்களன்று சோதனைகளில் ஈடுபட்ட நிலையில் ஆண்கள் பெண்கள் என 122 சீனர்கள் கைதுசெய்யப்பட்டதாக தலைநகர் காத்மண்டின் பொலிஸ் துறைத் தலைவர் உத்தம் சுபேடி நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

இதுகுறித்து பொலிஸ் அறிக்கையில், “காத்மண்டில் சீன நாட்டைச் சோ்ந்த ஒரு கும்பல் இணையதளம் மூலம் வங்கி ஏ.ரி.எம் கணினிகளில் ஊடுருவி மோசடியில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து அவர்களைச் சுற்றிவளைத்த நாங்கள் 122 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து 500இற்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் மீட்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டின் பேரில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டமை இதுவே முதன்முறை ஆகும்.

இணையத்தள மோசடி மட்டுமன்றி, விசா மோசடியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என பொலிஸார் தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top