Canada

பணப்பையை தவறவிட்ட மூதாட்டி: அகதிச் சிறுவன் செய்த பிரதிபலன் எதிர்பாரா உதவி!

 

கனடாவில் உடற்குறைபாடு கொண்டோருக்கான ஓய்வூதியத்தில் வாழ்ந்துவரும் ஒரு மூதாட்டி தனது பர்ஸை தவறவிட்ட நிலையில், அதைக் கண்டெடுத்த அகதிச் சிறுவன் ஒருவன் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அதை பத்திரமாக உரியவரிடம் ஒப்படைத்துள்ளான்.

Windsorஇல் வாழும் Suzan Dietering, பல் மருத்துவரை சந்திக்கச் செல்லும் வழியில் தனது பர்ஸை தவறவிட்டார். சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த Abdullah Almathhoul என்ற 12 வயது சிறுவன் கையில், அந்த பர்ஸ் கிடைத்துள்ளது.

Abdullahவின் பெற்றோரான Abdalslamம் Munaவும், தங்கள் ஐந்து குழந்தைகளுடன் சிரியாவிலிருந்து அகதிகளாக கனடாவுக்கு வந்தவர்கள். தன் கையில் கிடைத்த பர்ஸை தனது தந்தையிடம் ஒப்படைத்த Abdullah, அது என்னுடையது அல்ல, அதனால் அதை நான் திறந்து பார்க்கவில்லை என்கிறான்.

அவனது தந்தை அந்த பர்ஸ் யாருடையது என்று அறிவதற்காக அதைத் திறந்து பார்க்க, அது அருகாமையில் வசிக்கும் Suzanஉடையது என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக சென்று Suzanஐத் தேட, அவர் இன்னமும் வீடு திரும்பவில்லை. எனவே, அக்கம் பக்கத்தவர்களிடம், அவர் வந்தால் தங்கள் வீட்டுக்கு வரச்சொல்லிவிட்டு வீடு திரும்பியுள்ளனர் Abdullahவின் பெற்றோர்.

இதற்கிடையில் கையில் பணமும் இல்லாமல் பர்ஸையும் தொலைத்துவிட்டு பயமும் கவலையுமாக வீடு திரும்பிய Suzanக்கு Abdullahவின் பெற்றோர் வந்து போன செய்தி கிடைக்க, உடனே அவர்கள் வீட்டுக்கு சென்றுள்ளார் அவர். Abdullahவின் வீட்டிற்கு சென்ற Suzanக்கு நல்ல வரவேற்பளித்த Abdullahவின் குடும்பம், அவரிடம் அவரது பர்ஸை ஒப்படைத்துள்ளது.

அதில்தான் தனது அடையாள அட்டை, வங்கி அட்டை என அத்தனை முக்கிய பொருட்களும் இருப்பதால் தான் அதிர்ந்து போனதாக தெரிவித்த Suzanக்கு ஆறுதல் கூறியுள்ளது Abdullahவின் குடும்பம். தனது பர்ஸை பத்திரமாக ஒப்படைத்த Abdullahவுக்கு சிறிய தொகை ஒன்றை பரிசாக வழங்க Suzan முன்வர, தான் தன் கடமையைத்தான் செய்ததாக பெரிய ஆள்போல் கூறி மறுத்துள்ளான் அவன்.

இந்த குடும்பம் என்னை நெகிழச் செய்துவிட்டது என்று Suzan கண்ணீர் மல்கத் தெரிவிக்க, Abdullahவின் பெற்றோரோ, நீங்கள் எங்கள் சகோதரியைப் போல, இனி என்ன உதவி வேண்டுமானாலும் எங்களிடம் கேளுங்கள் என்று கூறி மேலும் அவரை நெகிழச் செய்துள்ளார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top