பார்க்டேலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக, ரொறன்ரோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிங் வீதி மேற்கு மற்றும் ஜேம்சன் அவென்யூவில் உள்ள வளாகத்தில், நேற்று (திங்கட்கிழமை) மதியம் 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதும், துரதிஷ்டவசமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இதன்போது, சம்பவ இடத்திலிருந்து ஒருவர் தப்பியோடியதாக கூறும் பொலிஸார், அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
ரொறன்ரோவில் இடம்பெற்ற ஆண்டின் 73ஆவது படுகொலையாக இது பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த கொலை சம்பவம் தொடர்பாக படுகொலை பிரிவு, விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது