News

பிரித்தானியாவில் 10 பேரின் தற்கொலைக்கு முகப்பருவுக்கான மருந்து காரணம்?:

பிரித்தானியாவில் முகப்பருவுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து ஒன்றின் பக்க விளைவுகள் 10 பேரின் தற்கொலைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் Roaccutane என்னும் அந்த மருந்தை பயன்படுத்தியவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களில் 10 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Annabel Wright என்னும் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவளது பெற்றோர் குறிப்பிட்ட மருந்துதான் தங்கள் மகள் தற்கொலை செய்துகொள்ள காரணம் என குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த விடயம் வெளியில் வந்தது.

 

 

2017இல் Luke Reeves என்ற இளைஞரின் பெற்றோர், நான்கு மாதங்கள் தங்கள் மகன் Roaccutane எடுத்துக்கொண்டதாகவும், அவனது நடவடிக்கைகள் எரிச்சலூட்டும் வகையில் மாறியதாகவும், அதுவே அவனது மரணத்துக்கு வழிவகுத்திருக்கலாம் என்று நம்புவதாகவும் கூறியிருந்தார்கள்.

Roaccutane தயாரிக்கும் நிறுவனம் மக்களை கொலை செய்வதாக Essex Coroner நீதிமன்றத்தில் தெரிவித்த அவரது தந்தையான Robert Reeves (50), தனது மகன் Robertஇன் பர்சனாலிட்டி முற்றிலும் மாறிப்போனதாக தெரிவித்தார்.

சிறந்த குதிரையேற்ற வீரரான Jack Bowlby (16)ம் முகப்பருவுக்காக Roaccutane எடுக்க ஆரம்பித்த பிறகு, பயங்கர எதிர்மறை நினைவுகள் ஏற்பட்டதாகவும், அவரது மன நிலைமை வன்மையாக மாறி மாறி காணப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். அவர் 2012ஆம் ஆண்டு ஒரு நாள் தனது பள்ளி ஹாஸ்டல் அறையில் இறந்துகிடந்தார்.

 

 

பிரித்தானியாவில் ஆண்டொன்றிற்கு சுமார் 30,000 பேர் இந்த மருந்தை பயன்படுத்துவதாக தெரிகிறது. ஆறே மாதங்களில் 95 சதவிகிதம் முகப்பருவை குணமாக்கக்கூடிய Roaccutaneஐ பயன்படுத்தியவர்களில் 70 சதவிகிதம் பேர், அதற்குப்பின் தங்களுக்கு முகப்பருவே வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதே Roaccutaneஐ பயன்படுத்துபவர்களுக்கு anxiety, வன்முறை எண்ணங்கள், மனோபாவத்தில் மாற்றம், தற்கொலை எண்ணங்கள் உட்பட ஏராளமான பயங்கர பக்க விளைவுகளும் உள்ளன. ஆகவே மருந்துகளை கண்காணிக்கும் அமைப்பு ஒன்று இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ஒன்றை துவக்கியுள்ளதோடு, மருந்துகள் விற்பனை மீதான கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top