பிறக்கவிருக்கும் புத்தாண்டு 2020-ல் சட்டம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு விதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பிரித்தானியாவில் அமுலுக்கு வர உள்ளது.
அசுர பலத்துடன் புதிதாக பொறுப்பெற்றுள்ள போரிஸ் ஜான்சன் அரசு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கவும், கிக் பொருளாதார தொழிலாளர்களுக்கான புதிய உரிமைகள் மற்றும் வடக்கு அயர்லாந்தில் ஓரின சேர்க்கை திருமணம் மற்றும் கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களில் மாற்றங்களை கொணர முடிவு செய்துள்ளது.
ஜனவரி 2-ஆம் திகதி முதல் பிரித்தானியாவில் ரயில் கட்டணங்கள் 2.7 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது. தொலை தூரத்தில் பணியாற்றும் மக்களுக்கு இந்த ரயில் கட்டண உயர்வானது 100 பவுண்டுகள் வரை இழப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.
ஜனவரி 13 ஆம் திகதி வடக்கு அயர்லாந்தில் இதுவரை தடை செய்யப்பட்டுள்ள ஓரின சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக மாற்றப்படுகிறது. மார்ச் 2 ஆம் திகதி முதல் குறைந்தபட்ச ஆல்கஹால் விலையை நிர்ணயிக்கும் புதிய சட்டத்தை வெல்ஷ் அரசு அமுலுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது
மார்ச் 31 ஆம் திகதி முதல் வடக்கு அயர்லாந்தில் பெண்கள் சட்ட அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏப்ரல் 1ஆம் திகதி முதல் மனை உரிமையாளர்கள் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனைகளை காலியாக விட்டால், கவுன்சில் வரி 50% அதிகரிக்கும் என்ற நிலையில், ஏப்ரல் முதல், அந்த தொகை 100% ஆக அதிகரிக்கிறது நீண்ட காலமாக காலியாக இருக்கும் வீடுகளுக்கான கட்டணத்தை இரட்டிப்பாக்குகிறது.
மேலும் ஏப்ரல் முதல் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.