அத்துடன் இந்த மோதல் காரணமாக மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன் 50 க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

பாங்குயில் முஸ்லிம்கள் பெருமளவானோர் வாழும் பி.கே 5 என்ற மாவட்டத்திலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் ஆயுதக் குழுக்கள் வரி செலுத்துமாறு கட்டாயப்படுத்தியமையினாலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் கிளர்ச்சியாளர் தலைநகர் பாங்குய்யை கடந்த 2013 ஆம் ஆண்டு தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததைத் தொடர்ந்து 4.7 மில்லியன் மக்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.