மாவீரர்களின் தியாகங்களை மனதில் வைத்து தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் – சிறிதரன்

மாவீரர்களின் தியாகங்களை மனதில் வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் நாங்கள் செல்லும் பாதையை சரியாக வகுத்து, வேறு பாதையில் செல்பவர்களையும் அதில் இணைத்து முன்னோக்கிச் செல்லவேண்டும் எனக் கூறினார்.
தனிமையில் செயற்படுவோம் என்ற எண்ணம் ஒருபோதும் தமிழ் மக்களின் இலட்சியம், இலக்கு மற்றும் தமிழ் தேசிய இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.