முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கைது செய்யுங்கள்- தயாரத்ன தேரர்

நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி, தனது டொரிங்டன் இல்லத்தில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் அவரிடமிருந்து அறிக்கை பெறவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பல அமைப்புகளன் பொலிஸில் முறைப்பாடுகளை தெரிவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.