News

ராஜிதவை உடன் கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பித்தது நீதிமன்று

ஜனாதிபதித் தேர்தல் காலமான கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி வௌ்ளை வான் கடத்தல் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமை குறித்த வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிஸிட்டர்  ஜெனரல்  திலிப் பீரிஸ் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே கொழும்பு பிரதான நீதிமன்றத்தின் மேலதிக நீதிவான் ஆர்.பி. நெலும்தெனிய இந்தப் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகத் தன்னைக் கைதுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகச் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனு எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று தீர்மானம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால் அன்றைய தினம் வரை அவரைக் கைதுசெய்ய முடியாது என்று ராஜிதவின் சட்டத்தரணிகள் தெரிவித்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top