Canada

ரொரன்ரோவில் மூன்று நாட்களுக்கு முன்னர் மாயமான 14 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்…

கனடாவில் இரவில் மாயமான 14 வயது சிறுமி பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் சமூகவலைதளமான டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் Rebeca Quezada Orozco என்ற 14 வயது சிறுமி கடந்த 20ஆம் திகதி காணாமல் போனதாக தெரிவித்தனர்

அவர் கடைசியாக Rustic Road & Keele Street பகுதியில் 20ஆம் திகதி இரவு 10 மணிக்கு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது Rebeca ஒல்லியான உடல்வாகுடன் இருப்பார் எனவும் காணாமல் போன அன்று கருப்பு நிற ஆடை அணிந்திருந்தார் எனவும் பொலிசார் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.

இது தொடர்பில் பொதுமக்கள் உதவியையும் பொலிசார் நாடினார்கள். இந்நிலையில் சிறுமி Rebeca பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக   ரொரன்ரோ பொலிசார் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் உதவியவர்களுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top