ரொறென்ரோவில் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ள தமிழ்ப் பெண்…..

கனடாவின் ரொறென்ரோ பகுதியில் தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொறென்ரோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சமூகவலைதளமான ருவிற்றரில் பொலிஸார் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ சக்தி குமாரசாமி என்ற 53 வயது பெண் கடந்த 15 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 15 ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு கடைசியாக பின்ச் அவெனியூ (Finch Av) ரப்ஸ்கொற் (Tapscott) வீதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ சக்தி 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போன போது ஸ்ரீசக்தி கருப்பு நிற கோட், கருப்பு நிற பாதணி மற்றும் சிவப்பு நிறத்தில் தொப்பி அணிந்திருந்தார்.
ஸ்ரீசக்தி குறித்துத் தகவல் தெரிந்தால் பொலிஸார் அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.