லண்டன்: அடுத்தடுத்து நடந்த இரு கொலைகள்!

லண்டனில் அடுத்தடுத்து நடந்த இரு கொலை சம்பவங்களில் இருவர் பலியாகியுள்ளனர். வால்டாம்ஸ்டோவின் ப்ரோம்லி சாலையில், மாலை 7:15மணி அளவில் 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கத்திகுத்து காயத்துடன் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதேபோல் பார்னெட்டில் உள்ள ஸ்க்ராட்ச்வுட் பூங்காவிற்கு அருகில் 30 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் பொலிசார் அங்கு சென்ற போது அந்த நபருக்கு உயிர் இருந்துள்ளது. அவர்கள் முதலுதவி அளித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளார். இந்த இரண்டு சம்பவங்களிலும் இருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் வால்டாம்ஸ்டோவில் நடந்த தாக்குதலில் காயம் அடைந்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது குறித்து மேலாதிக்க தகவல்கள் ஒன்றும் பொலிசார் தரப்பில் வெளியிடப்படவில்லை. முன்னதாக லண்டனில் கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.