Canada

வன்கூவர் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து!

 

வன்கூவர்- வெஸ்ட் எண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில், பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

பிராட்டன் வீதி மற்றும் பீச் அவென்யூவின் மூலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் இந்த தீவிபத்து சம்பவித்துள்ளது.

10 மாடி உயர குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு தொகுப்பிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், குடியிருப்பின் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாக, வன்கூவர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் தெரிவித்துள்ளன.

இந்த தீவிபத்து எவ்வாறு சம்பவித்தது என்பது குறித்து பொலிஸார், தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top