வான்கூவர் தீவில் விழுந்து நொறுங்கிய விமானம்: ஒருவர் பலி

வான்கூவர் நோக்கி பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் ஒருவர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வான்கூவரிலுள்ள Tofino என்ற இடம் நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று குறித்த நேரத்தில் அங்கு சென்று சேராததையடுத்து, நான்கு விமானங்கள் அதை தேடும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
அப்பகுதி எளிதில் சென்றடைய முடியாத இடமாக இருப்பதால் தங்களால் இதுவரை அந்த இடத்தை அடையமுடியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். Tofinoவுக்கு சனிக்கிழமை மதியம் வந்தடையவேண்டிய அந்த விமானம் வந்து சேரவேயில்லை.
எனவே, கனேடிய விமானப்படையின் மீட்புக்குழு அந்த விமானத்தை தேடுவதற்காக இரண்டு விமானங்களை அனுப்பியது. அதேபோல், கனேடிய கடற்படையின் எல்லை பாதுகாப்பு படையும் இரண்டு விமானங்களை அனுப்பியது.
இந்நிலையில், விமானத்தின் beacon என்னும் கருவி செயல்படும் நிலையில் இருந்ததால், அதிலிருந்த சிக்னலை வைத்து அந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் Stewardson Inlet என்ற பகுதியில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில் இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால், அவர் யார் எப்படி உயிரிழந்தார் என்பது போன்ற விடயங்கள் இதுவரை தெரியவரவில்லை.
விபத்து எப்படி நடந்தது, இறந்தவர் யார் என்பதுபோன்ற விடயங்களை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.