விபத்துக்குள்ளாகி கார் மீது மோதி வெடித்து சிதறி சாம்பலான விமானம்… ஒருவர் மட்டும் தப்பிய அதிசயம்

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று காருடன் மோதி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லூசியானாவின் லாஃபாயெட்டில் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டுக்கு அருகே விமானம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் உள்ளுர் நேரப்படி 9:00 மணிக்கு (15:0) விபத்துக்குள்ளானது . விபத்தின் தாக்கத்தால் அருகிலுள்ள தபால் நிலையத்தின் ஜன்னல்களை நொறுங்கின.
தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பற்றி எரிந்து முழுவதுமாக சாம்பலானது. விமானம் விபத்துக்குள்ளானபோது கார் மீது மோதியதில் ஓட்டுநர் காயமடைந்தார். சம்பவயிடத்திலிருந்த மேலும் இரண்டு பேரும் காயமடைந்துள்ளனர்.
விமானத்தில் மொத்தம் 6 பேர் பயணித்த நிலையில் விமானி உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். பலியானவர்களில் ஒருவர் விளையாட்டு நிருபர் கார்லி ஆன் மெக்கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தை அடுத்து சூப்பர் மார்க்கெட்டு மூடப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
DEADLY PLANE CRASH: Five people were killed and several hurt after a small plane crashed into a field in Lafayette, Louisiana, with new video showing the fiery wreckage; one lone survivor from the plane was hospitalized. https://t.co/wJ31TnJ8a4 pic.twitter.com/MPnhEB68wc
— World News Tonight (@ABCWorldNews) December 28, 2019