விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானத்தை திருடி ஒட்டிய 17 வயது சிறுமி கைது

கலிபோர்னியா விமான நிலையத்திலிருந்து விமானத்தை திருடிய 17 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அடையாளம் காணப்படாத 17 வயது சிறுமி ஒருவர், கடந்த புதன்கிழமையன்று யோசெமிட்டி ஃப்ரெஸ்னோ விமான நிலையத்தில், கிங் ஏர் 200 என்கிற சிறிய ரக விமானத்தை திருடி ஒட்டியுள்ளார்.
உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் வந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். விமானம் திருடப்பட்ட குற்றச்சாட்டில் தற்போது சிறுமி, சிறார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும், உள்ளூரில் எந்த குற்றச்சாட்டுக்களும் அவர் மீது இல்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
வழித்தடங்களுக்கு அருகிலுள்ள விமான நிலையத்தின் ஒரு பகுதியில் பிரதான இடத்தில், ஆள் யாரும் இல்லாத இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிசிடிவியில் பதிவாகியிருந்த வீடியோ காட்சியினை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மேலும், அந்த சிறுமி விமானத்தை இயக்குவதற்கான தொடர்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.