ஸ்கார்பாரோவில் புதன்கிழமை இரவு கம்பத்தில் மோதிய ஆண் ஓட்டுநர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ரொறன்ரோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு 7:46 மணியளவில் எல்லெஸ்மியர் சாலையின் தெற்கே உள்ள ஸ்கார்பாரோ கோல்ஃப் கிளப் மற்றும் நெவார்க் சாலைகள் பகுதியில் காரொன்று கம்பத்தில் மோதப்பட்டிருந்த நிலையில். அதிலிருந்து 30வயது மதிக்க ஒருவர்துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
காரிலிருந்து மீட்கப்படட நபர் உயிராபத்தான நிலையில் trauma centre ற்கு கொண்டுச் செல்லப்பட்டார். எனினும் அவரது தற்போதைய நிலை வெளியிடப்படவில்லை.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தற்போது இதுகுறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார், சாட்சிகளையும் பாதுகாப்பு கெமரா காணொளியையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.