இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகியுள்ளதுடன் 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 500 அடி (150 மீற்றர்) ஆழ செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள் இரவு பெங்குலு மாகாணத்தில் இருந்து 27 பயணிகளுடன் பணயத்தை ஆரம்பித்த குறித்த பஸ்ஸில் விபத்து ஏற்பட்ட போது 50 பயணிகள் வரை இருந்ததாக மீட்கப்பட்வர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆழமான பள்ளத்தாக்கில் பஸ் வீழ்ந்துள்ளதால் மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், இன்னும்பலர் பஸ்ஸில் சிக்கியுள்ளதுடன் சிலர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. விபத்து குறித்து போலீஸார் மேலதீக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சேதமடைந்த வீதிகள் மற்றும் பழைய வாகனங்கள் காரணமாக ஆசிய நாடுகளில் பல பாரிய விபத்துகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்படத்தக்கது.