News

கிழக்கில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள்!

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில், இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

 

 

திருச்செந்தூர் சுனாமி நினைவுத்தூபியில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் வழிபாடுகள் நடத்தப்பட்டு, இப்பிரதேசத்தில் உயிரிழந்த 243 பேரின் திருவுருவப்படங்களுக்கு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 

அம்பாறை – திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் உயிர்நீத்த 598 பேருக்காக, திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தால், திருக்கோவில் பொது விளையாட்டு மைதானத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

 

 

திருகோணமலை, மூதூர் கிழக்கு – கட்டைபறிச்சான் விபுலானந்தர் வித்தியாலயத்திலும், நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. சுனாமியில் பலியான பாலசுகுமார் அனாமிகாவின் நினைவாகப் பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top