அடுத்த கட்ட தாக்குதலுக்கு நாங்கள் தயார்… ஈரானை அடுத்து கொக்கரிக்கும் ஈராக்: முற்றும் போர் பதற்றம்

ஈரான் தளபதி குவாசிம் படுகொலைக்கு நாங்களும் பழி தீர்ப்போம் என ஈராக் ராணுவ தளபதி மிரட்டல் விடுத்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாதில் ஈரானிய குத்ஸ் படைகளின் தலைவர் குவாசிம் சுலைமானியுடன் கொல்லப்பட்டவர் ஈராக்கிய அரசியல்வாதியும் ராணுவத் தளபதியுமான அபு மஹ்தி அல் முஹந்திஸ்.
குவாசிம் சுலைமானியின் படுகொலைக்கு ஈரான் அமெரிக்க துருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது தங்கள் தளபதி மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பழி தீர்க்கப்படும் என ஈரான் ஆதரவு ஈராக்கிய போராளிகள் குழு தளபதி Qais al-Khazali மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தால் தீவிரவாத குழு என அறிவிக்கப்பட்டுள்ள Al-Hashd Al-Sha’abi குழுவின் தளபதிகளில் ஒருவரான இவர், குவாசிம் சுலைமானியின் படுகொலை தொடர்பில் ஈரான் முன்னெடுத்துள்ள தாக்குதல் நடந்து முடிந்துள்ளது. இனி அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் முன்னெடுப்போம், எங்கள் தளபதி முஹந்திஸ் படுகொலைக்கு பழி தீர்ப்போம் என தெரிவித்துள்ளார்.
ஈராக்கியர்கள் தைரியமானவர்களாகவும் வைராக்கியமானவர்களாகவும் இருப்பதால், அவர்களின் பதில் ஈரானுக்கு நிகராகவோ அல்லது கண்டிப்பாக அதற்குக் குறைவாகவோ இருக்காது. இது உறுதி என குறிப்பிட்டுள்ளார். பாக்தாதில் குவாசிமுடன் கொல்லப்பட்ட ஈராக்கிய தளபதி அபு மஹ்தி அல் முஹந்திஸ் ஈரானின் குத்ஸ் படைகளுடன் நேரடி தொடர்பு கொண்டவர்.
1980 காலகட்டத்தில் குவைத்தில் இவரது செயற்பாட்டுக்காகவும் 1983 ஆம் ஆண்டில் குவைத்தில் வெடிகுண்டு தாக்குதலுக்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டதாகவும் அந்த நாட்டு அரசு 2007 ஆம் ஆண்டு இவருக்கு மரண தண்டனை விதித்தது. மட்டுமின்றி தீவிரவாதிகள் என அமெரிக்க வல்லரசால் அறிவிக்கப்பட்ட நபர்களில் முஹந்திசும் ஒருவர்.
ஜனவரி 3-ஆம் திகதி அமெரிக்கா முன்னெடுத்த ஆளில்லா விமான தாக்குதலில் குவாசிம் உள்ளிட்ட ஆறு பேர் கொல்லப்பட்டதில் முஹந்திசும் ஒருவர்.