அமெரிக்காவை புரட்டி போட்ட புயல் – 8 பேர் பலி


பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.

மேலும் இந்த புயலால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. புயலில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
