அமெரிக்க சலூனில் துப்பாக்கி சூடு: 5 பேர் காயம்

இந்த நிலையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு சலூனில் முடிவெட்டுவதற்காக நேற்று முன்தினம் சிலர் காத்திருந்தனர். அப்போது கடையின் ஜன்னல் வழியாக 2 பேர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் கடையில் இருந்த 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 5 பேரின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் போலீஸ் அதிகாரிகள் கூறினர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.