அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட குவாசிம் சுலைமான் உடல் முற்றிலும் சிதைந்துவிட்டது எனவும் அவரின் பாக்கெட்டில் இருந்து 5000 இரானியன் ரியால் இருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை ஆளில்லா ஏவுகணை அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார்.
இது உலகநாடுகளுடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அமெரிக்காவின் இந்த கொடூர குற்றத்திற்கு ஈரான் மற்றும் அதன் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் பழிவாங்கும் என்பதில் சந்தேகமில்லை.
அமெரிக்கா தனது குற்ற நடவடிக்கையால் ஈரானின் இதயத்தை காயப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொடுமைகளுக்கு எதிராக நிற்கவும், இஸ்லாமிய மதிப்புகளை பாதுகாக்கவும் ஈரான் தனது உறுதியை இரட்டிப்பாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த கோழைத்தனமான செயல், அதன் விரக்தி மற்றும் பலவீனத்தின் மற்றொரு அறிகுறியாகும். அமெரிக்கா அதன் செயலுக்கு நிச்சயம் பழிவாங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் குவாசிம் சுலைமான் எப்படி இறந்து கிடந்தார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில், குவாசிம் சுலைமானின் முகம் முற்றி சிதைத்துவிட்டு அடையாளம் காணபோக முடியாத நிலையில் இருந்ததாகவும், அவரது உடல் நான்கு பகுதிகளாக துண்டிக்கப்பட்டு கிடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
அவர் அணிந்திருந்த மோதிரம் மூலம் மட்டுமே அவரை அடையாளம் காண முடிந்த நிலையில், சடலத்தின் அவருடைய பாக்கெட்டில் இருந்து 5000 இரானியன் ரியால் இருந்துள்ளது, அதுமட்டுமின்றி சுலைமான் பாதுகாப்பு படையினர் வைத்திருந்த பையில் Farsi மொழியில் மத கவிதை புத்தகம் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.