எட்டோபிக்கோவில் பஸ் தங்குமிடம் மீது மோதியதில் டிரைவர் படுகாயம்

சனிக்கிழமை காலை எட்டோபிக்கோவிலுள்ள பஸ் தங்குமிடம் மீது வாகனம் மோதியதில் ஒரு பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலை 27 க்கு அருகிலுள்ள ஆல்பியன் சாலை மற்றும் கேரியர் டிரைவ் பகுதியில் காலை 10 மணியளவில் ஒரு வாகனம் பஸ் தங்குமிடம் மீது மோதியதில் ஒரு பெண் பலத்த காயம் அடைந்தார்
காயம் அடைந்த பெண்ணுக்கு துணை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் சிபிஆர் செய்தனர்.பின்னர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த நேரத்தில் பஸ் தங்குமிடம் உள்ளே யாரும் இல்லை என்று போலீசார் கூறுகின்றனர்.