இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மவுசாவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அப்பாஸ் மவுசாவி கூறுகையில் ‘‘அமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக உள்ளோம். தளபதி கொல்லப்பட்டதற்கு தெஹ்ரான் பழிக்குழி வாங்கியே தீரும். அதிகாரிகள் அமெரிக்கா ஏன் தாக்குதல் நடத்தினோம் என்று வருந்தும் அளவிற்கு முடிவை எடுப்பார்கள். அதே சமயம் போரை முன்னிலைப் படுத்தாது’’ என்றார்.