கனடாவில் இந்திய இளம்பெண் மாயம்!

கனடாவில் காணாமல் போன இந்திய இளம்பெண் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. ரொரன்ரோ பொலிசார் வெளியிட்ட அறிக்கையில் Heeral Patel என்ற 28 வயதான இளம்பெண் கடந்த 11ஆம் திகதியில் இருந்து மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கடைசியாக இரவு 11 மணிக்கு Islington Avenue and Steeles Avenue West பகுதியில் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன அன்று Heeral Patel சாம்பல் நிற பேண்ட்டும், கறுப்பு நிற சட்டையும் அணிந்திருந்ததாகவும் அவர் குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் இது குறித்த பதிவை சமூகவலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்,