Canada

கனடாவில் கவுண்டியில் இடம்பெற்ற வாகன விபத்து: ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டியில் இடம்பெற்ற விபத்தில், ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில் ஒட்டாவாவிலிருந்து தென்மேற்கே 214 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  கான்செகன் அருகே உள்ள கவுண்டி வீதி 1 மற்றும் அலெக்சாண்டர் வீதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இடம்பெற்ற விபத்தில், ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், எவ்வாறு விபத்து நிகழ்ந்தது, இந்த விபத்தில் எத்தனை வாகனங்கள் தொடர்புபட்டுள்ள என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

காயமடைந்தவர்களில் தெரியாத வயதுடைய ஒரு சிறு குழந்தை உள்ளதாவும், காயமடைந்தவர்களின் காயத்தின் தன்மை குறித்தும் தற்போது கூற முடியாதுள்ளதாக ஒன்ராறியோ பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பில் டிக்சன் தெரிவித்துள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top