கனடாவில் மாயமான தமிழ்ச் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டார்

கனடாவில் தமிழ் சிறுவன் காணாமல் போனதாக பொலிசார் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் அவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கனடாவின் ரொரன்ரோ பொலிசார் வெளியிட்ட அறிவிப்பில் அஸ்வின் யோகநாதன் என்ற 13 வயது சிறுவன் கடந்த 30ஆம் திகதி Bellamy Rd and Cedar Brae Bl பகுதியில் கடைசியாக காணப்பட்டதாகவும் பின்னர் மாயமானதாகவும் தெரிவித்தனர்.
இதோடு, தமிழ்ச்சிறுவனான அஸ்வின் யோகநாதன் சாலையில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அஸ்வின் யோகநாதன் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான தகவலை பொலிசார் வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு உதவியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.