கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
அதற்கமைய குறித்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாட்டை வந்தடைந்தார்.
அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சிலரை சந்தித்து அலிஸ் வேல்ஸ் கலந்துரையாடவுள்ளார்.
மனித உரிமைகள், நீதி, ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்தை அடைவதற்கு சுதந்திரம் மற்றும் திறந்த இந்து பசுபிக் வலய பொது அபிலாஷைகள் உள்ளிட்ட வலய மற்றும் இரு தரப்பு பிரச்சினைகள் குறித்து அலிஸ் வேல்ஸின் இந்த விஜயத்தின்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே அலிஸ் வேல்ஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.