News

சுமந்திரனை கொலை செய்யும் முயற்சி: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

 நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யுமாறு குறித்த கைதிகளின் உறவினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு சம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 2017ஆம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் 2018ஆம் ஆண்டு விசாரணை எனக்கூறி அழைத்து கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஏனைய நால்வரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, குறித்த இளைஞர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு முன்னாள் போராளிகளையும் விடுதலை செய்வதற்கு நாட்டின் ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top