டுபோன்ட் மற்றும் டஃபெரின் வீதிகளுக்கு அருகே இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் படுகாயம்

நகரின் வாலஸ் எமர்சன் சுற்றுப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வியாழக்கிழமை அதிகாலை ஒரு டீனேஜ் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது டுபோன்ட் மற்றும் டஃபெரின் வீதிகளுக்கு அருகிலுள்ள லாபின் அவென்யூவில் அதிகாலை 2:30 மணியளவில் வீதிக்கு வெளியே 16 வயது சிறுவன் மீது சந்தேக நபர் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனி ன் காயங்கள் கடுமையானவை, ஆனால் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என துணை மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் துப்பாக்கிச் சூடு இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என்று விசாரணையாளர்கள் நம்புகின்றனர். சாத்தியமான சந்தேக நபர்கள் குறித்து பொலிசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை