குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திர குமார், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக தடுத்துவைக்கப்படிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக கடந்த மாத இறுதியில் உயிரிழந்தார்.
19 வயதில் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 27 ஆண்டுகள் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர், கடுமையான சுகயீனத்துக்குள்ளான நிலையில், உரிய சிகிச்சைகள் சீராக வழங்கப்படாமை காரணமாக உயிரிழந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
அவரது உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்தும் சிறைகளில் வாடும் அனைத்து அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.