பனிப்புயலால் சிகாகோவில் 850 விமானங்கள் ரத்து

இது தொடர்பாக விமானத்துறை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
“சிகாகோவில் குளிர்கால வானிலை காரணமாக, விமான நிறுவனங்கள் 850-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளன.
தி ஒஹேர் சர்வதேச விமான நிலையத்தில் 686 விமானங்களும், மிட்வே சர்வதேச விமான நிலையத்தில் 169 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக சுமார் 470 விமானங்கள் தாமதமாகிவிட்டன. மேலும் ஒஹேர் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.