Canada

பிராம்ப்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் தீவிபத்து: பெண்னொருவர் உயிரிழப்பு

 ரொறன்ரோ- பிராம்ப்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், 60 வயது பெண்னொருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளார்.

 நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஃபயர்சைட் ட்ரைவ் மற்றும் நேவி கிரசண்ட் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முதல் மாடியில்  இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது

 

 

இத்தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் வீட்டின்  முதல் மாடியில்  பெண்னொருவரை சடலமாக கண்டெடுத்துள்ளனர்.

அப் பெண்  60 வயதுடையவர் , அவர் கனடாவிற்கு  இந்தியாவில் இருந்து   குடும்பத்தைப் பார்வையிடுவதற்கு வந்தவர்.  திடீர் மரணத்தால் குடும்பம் “உடைந்துவிட்டது”

 

 

“ஒன்ராறியோ ஃபயர் மார்ஷல் அலுவலகம், பீல் பொலிஸ் மற்றும் உள் புலனாய்வாளர்கள் இந்த நெருப்பின் தோற்றம், காரணம் மற்றும் சூழ்நிலையை தீர்மானிக்க முயற்சிக்கின்றனர்,

தீ விபத்தில்  வேறு யாருக்கும்  காயங்களும் ஏற்படவில்லை. தீ மற்றும் விசாரணை காரணமாக இப்பகுதியில் பல சாலைகள் மூடப்பட்டன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top