Canada

 பிரிட்டீஸ் கொலம்பியாவில் Set for live லொட்டரியில் பரிசை வென்ற பெண்

கனடாவில் லொட்டரியில் பெரிய பரிசை வென்றுள்ள பெண் அந்த பணத்தை வைத்து மாணவ, மாணவிகளுக்கு உதவ உள்ளதாக கூறியுள்ளார்.

பிரிட்டீஸ் கொலம்பியாவை சேர்ந்தவர் Eleanor Kendall. இவர் சாதாரண நிலையில் இருந்தாலும் சிறுவர்களுக்கும், மாணவர்களும் கல்விக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் Eleanor வாங்கிய லொட்டரி சீட்டுக்கு $675,000 பரிசு விழுந்துள்ளது. இது அவரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து Eleanor கூறுகையில், லொட்டரியில் பரிசு விழுந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

எனக்கு கஷ்டத்தில் யாரும் உதவியது இல்லை, இதை நான் பலமுறை புலம்பியுள்ளேன். ஆனால் அந்த சமயத்திலும் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்தேன்.

தற்போது எனக்கு கிடைத்துள்ள பணத்தை என் குடும்பத்துக்கு தேவையான விடயத்தை செய்வேன். இதோடு மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top