News

மட்டக்களப்பு சிறைச்சாலை கூரைக்கு மேலே ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் சுகயீனமுற்ற நிலையில்  இன்று (05) ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இரண்டு கைதிகள் சிறைச்சாலை கூரையினை உடைத்து கூரைக்கு மேல் ஏறி
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வந்த  நிலையில் மேலும் பலரும் கூரையின் மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஏறாவூர் பெண்கள் சந்தை வீதியைச் சேர்ந்த 38 வயதையுடைய ஈஷா லெப்பை நஜீம் என்ற நபர்   கைது செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு  சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் சுகனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
 இதனை தொடர்ந்து  சக சிறைக்கைதிகள் 20 இற்கு மேற்பட்டோர் குறித்த உயிரிழப்பு தொடர்ப்பில் அதிகாரிகளின் கவலையீனமே காரணமென கோரிக்கை விடுத்து   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதை தொடர்ந்து குறித்த கைதியின் மரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

காய்ச்சலினால் சிறைச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

எனினும் குறித்த சிறைக் கைதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைக் கைதிகள் நீதிபதி அவர்கள் நேரடியாக சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த சிறைக் கைதிகளின் போராட்டத்தினை தொடர்ந்து சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதுடன் படையினரும் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

 

 

குறித்த சிறைக் கைதிகளின்போராட்டம் காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிசாரும் இராணுவத்தினரும்  குவிக்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top