Canada

மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்… மகனுக்கு இறுதி விடை கொடுக்காமல் காத்திருக்கும் தந்தை

சுமார் ஏழு ஆண்டுகளுக்குமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகன் தற்கொலை செய்துகொண்டதற்கு இழப்பீடு கோரி வழக்கு தொடர முடிவு செய்தார் ஒரு தந்தை. இதுவரை தனது மகனுக்கு இறுதி பிரியாவிடை கொடுக்காமல் காத்திருக்கிறார் ரொரன்றோவைச் சேர்ந்த ராகேஷ் திவாரி.

2014ஆம் ஆண்டு, தனது மகன் பிரஷாந்தை மன நல மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய சூழல் திவாரிக்கு. ஆனால், மன நல மருத்துவமனையில், முழுவதும் மருத்துவமனை ஊழியர்களின் கண்காணிப்பிலேயே இருக்கவேண்டிய பிரஷாந்த், குளியலறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.

 

 

15 நிமிடங்களுக்கொருமுறை நோயாளியை கவனிக்கவேண்டிய நர்ஸ்கள், 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்குப் பிறகே அவர் இறந்துகிடப்பதைக் கவனித்திருக்கிறார்கள்.

மகனின் இறப்பால் அதிர்ந்துபோன திவாரி, மருத்துவமனையை நீதிமன்றத்துக்கு இழுக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால், திவாரியின் வழக்கை விசாரிக்க நீதிமன்றங்களில் இடமில்லை. வெகு பாடு பட்டு, ஆதாரங்களைத் திரட்டி, ஆவணங்களை தயார் செய்து கடைசியாக மருத்துவமனையையும் சம்மதிக்கச் செய்து இம்மாதம் (ஜனவரி) 8ஆம் திகதி நீதிமன்றத்திற்குச் சென்றால், அங்கு அவர்களுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

 

 

வழக்கை விசாரிக்க ஒரு நீதிமன்றத்திலும் 2021 வரை இடமில்லை. நீதித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மனம் தளர்ந்துபோன திவாரி, தன்னை மருத்துவத்துறைதான் கைவிட்டது என்றால், நீதித்துறையும் கைவிட்டுவிட்டது என்கிறார்.

தன் மகனுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுவிட்டது என்கிறார் திவாரி.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top