மால்வனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மால்வெர்னில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளார்.
இந்த சம்பவம் மாலை 6 மணிக்குப் பிறகு மால்வெர்னில் உள்ள நெல்சன் சாலை மற்றும் குரோ டிரெயில் அருகே நபர் ஒருவர் மீது சந்தேக நபர் துப்பாக்கி சூடு மேற்கொண்ட பின் தப்பி சென்றுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட ஒருவரை அவர்கள் கண்டுபிடித்தனர். அவரை மருத்துவ மணைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது மருத்துவமனையில் இறந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஷெல் கேசிங் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் .பின்னர் கொலைக் குற்றவாளிகள் விசாரணை பிரிவு விசாரணையை எடுத்துக் கொண்டனர் என போலீசார் தெரிவித்தனர்
சந்தேகத்திற்கிடமான விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை.