இந்த வார தொடக்கத்தில் மிசிசாகா ரவுன்ஹவுஸ் வளாகத்தில் போலீசாரால் சுடப்பட்ட 28 வயது நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இறந்துள்ளார்.
ஜன. 7 அன்று இரவு 7:30 மணியளவில் வின்ஸ்டன் சர்ச்சில் Boulevard மற்றும் எக்ளிண்டன் அவென்யூ வெஸ்ட் பகுதியில் இச் சம்பவம் நடந்தது.
போதைப்பொருள் விசாரணை தொடர்பாக இரகசிய அதிகாரிகள் ஒரு வாகனம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அதிகாரிகள் வாகனத்தை அணுகியபோது, வாகனம் அவர்களை நோக்கி சென்றது அப்போது ஒரு அதிகாரி டிரைவர் மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார்,
வாகனம் ஒரு வீட்டின் கேரேஜில் மோதியது. வாகனத்தின் தனியாக இருந்த டிரைவரை உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் துணை மருத்துவர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மாகாண சிறப்பு புலனாய்வு பிரிவு, சுடப்பட்ட நபர் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தினர். அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் அவரது பெயரை வெளியிட மாட்டார்கள் என்று SIU கூறியது
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது. தகவல் உள்ள எவரும் போலீஸைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.