வடக்கு மெக்ஸிகோவில் உள்ள தொடக்கப்பள்ளியில் 11 வயது சிறுவன் துப்பாக்கிசூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகன் நகரமான டோரியனில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு அனைத்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்ளூர் மேயர் ஜார்ஜ் ஜெர்மெனோ இன்பான்ட் கூறுகையில், கோஹுயிலாவில் டொரொயனில் உள்ள செர்வாண்டஸ் தொடக்கப்பள்ளியில் பயிலும் 11 வயது சிறுவன், இன்று பள்ளிக்கு இரண்டு கைதுப்பாக்கிகளுடன் வந்துள்ளான்.
திடீரென அந்த சிறுவன் பெண் ஆசிரியர் ஒருவரையும், வகுப்பு தோழர்களையும் சுட்டுகொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
இதில் படுகாயமடைந்த 4 சிறுவர்கள் வேகமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சாத்தியமான நோக்கம் உடனடியாக அறியப்படவில்லை. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.