2019ம் ஆண்டு சவுதி அரேபியாவில் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியதற்காக கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சவுதி அரேபியா 184 பேரைக் கொன்றது, இதில் மூன்று கைதிகள் கைது செய்யப்பட்டபோது சிறுவர்களாக இருந்தனர். கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாட்டில் நிறைவேற்றப்பட்ட அதிகமான மரண தண்டனை இதுவாகும்.
இறந்தவர்களில் 21 வயதான அப்துல்கரீம் அல்-ஹவாஜ்-ம் அடங்குவார். அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியதற்காக அவர் 16 வயதில் கைது செய்யப்பட்டார்.
அப்துல்கரீம் வாக்குமூலம் அளிக்கும் வரை அவரது கைகள் அவரது தலைக்கு மேலே சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிலையில் மின்சாரத்தால் சித்திரவதை செய்யப்பட்டார்.
2019ல் 21 வயதில் அப்துல்கரீமின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனையை நிறைவேற்றியது சவுதி அரசு. ‘பயங்கரவாதம்’ குற்றங்களில் தண்டனை பெற்ற அப்துல்கரீம் உட்பட கைதிகள் 36 பேருக்கு 2019 ஏப்ரல் மாதம் ஒரே நாளில் தலை துண்டிக்கப்பட்டு மரண் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டபோது சிறுவராக இருந்த எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற மாட்டோம் என்று சவுதி அரேபியா உறுதியளித்த போதிலும் இளைஞர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
184 பேரில் ஒருவர் ஓரின சேர்க்கையாளராக இருந்தார். 2019ல் ‘பயங்கரவாத’ குற்றங்களுக்காக 37 பேரும், போதைப்பொருள் கடத்தலுக்காக 82 பேரும், கொலைக்கு 57 பேரும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இறந்த 184 பேரில் 88 பேர் சவுதிகள், 90 பேர் வெளிநாட்டினர் மற்றும் ஆறு பேர் அறியப்படாத தேசத்தினர். மரண தண்டனையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவும் பிரித்தானியாவும் சவுதிக்கு சர்வதேச அழுத்தங்களை கொடுத்தால் பிராந்தியத்தில் மாற்றம் ஏற்படும் என மரண தண்டனைக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்ட வரும் குழுவின் இயக்குனர் மாயா ஃபோவா அழைப்பு விடுத்துள்ளார்.