யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்! ஏழுபேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். மாநகர் – கொட்டடியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதன்போது வாள்வெட்டு மற்றும் அந்த பகுதி மக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், இரு தரப்பையும் சேர்ந்த ஏழுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலையடுத்து ஊரவர்கள், சந்தேகநபர்களை துரத்திச் சென்ற போதிலும் அவர்கள், தங்கள் வந்த 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஐந்து மோட்டர் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
அவர்கள் பொம்மைவெளியைச் சேர்ந்தவர் என கொட்டடி இளைஞர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வன்முறைக் கும்பல் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.