ரஞ்சனின் செயல் மடத்தனமானது! அது அவமானத்தின் சின்னமானது!! – மைத்திரி கடும் சீற்றம்

மற்றவருடன் பேசும் தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்து வைத்திருந்தது ரஞ்சன் ராமநாயக்க எம்.பியின் அருவெறுக்கத்தக்க – மடத்தனமான செயல். அது அவமானத்தின் சின்னமாகும்.”
– இவ்வாறு விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சில உரையாடல்களின்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் இணைக்கப்பட்டுள்ள அதேவேளை, தற்சமயம் வெளியாகியுள்ள உரையாடல் பகுதிகளின் அடிப்படையில் மைத்திரியிடம் ரஞ்சன் நேரடியாகப் பேசி அதிகாரிகளுக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார் எனவும் அறியப்படுகின்றது.
இந்தநிலையிலேயே மைத்திரி இது குறித்து விசனம் வெளியிட்டுள்ளார்.