ரொரன்ரோவில் காணாமல் போன பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்

கனடாவில் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண் காணாமல் போன நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ரொரன்ரோ பொலிசார் வெளியிட்ட அறிக்கையில், Brenda Connor என்ற 57 வயது பெண் 11ஆம் திகதி பகல் 12.09 மணிக்கு கடைசியாக Queen Street West and reset Roncesvalles Av பகுதியில் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
வீல்சேரில் அமர்ந்திருந்த நிலையில் மாயமான Brenda ஒல்லியான உருவம் கொண்டவர் எனவும் காணாமல் போன நேரத்தில் கருப்பு, வெள்ளை நிற பேண்ட் மற்றும் நீல நிற மேலாடை அணிந்திருந்தார் எனவும் பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது
இந்நிலையில் Brenda பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர். அவர் கிடைக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தும் பொலிசார் பதிவிட்டுள்ளனர்.