விட்பியில் திங்கள்கிழமை பிற்பகல் பல வாகனங்கள் மோதியதைத் தொடர்ந்து 6 பேர் பலவிதமான 6 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று மாலை 4 மணியளவில் இது நெடுஞ்சாலை 7 மற்றும் லேக்கரிட்ஜ் சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றொடுஒன்று மோதி கொண்டதில் ஒரு வாகனம் தலை குப்புற கவுண்ட நிலையிலும் மற்றுமொரு வாகனம் முன்பகுதி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இரண்டு பேர் கடுமையான காயங்களுடன் டொராண்டோ trauma centre க்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் 4 பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண போலீசார் தெரிவித்தனர்.
காயங்கள் எதுவும் உயிருக்கு ஆபத்தானதாக கருதப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
தூய்மைப்படுத்தல் மற்றும் விசாரணைக்காக இப்பகுதியில் சாலைகள் பல மணி நேரம் மூடப்பட்டன