வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை மாணவிகள் – நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சடலங்கள்

அஸர்பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட விஷ வாயுவை சுவாசித்ததில் சிக்கி உயிரிழந்த 3 இலங்கை மாணவிகளின் சடலங்கள் நேற்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கட்டார் விமான நிலையத்தில் இருந்து விசேட விமானத்தின் மூலம் சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக உயிரிழந்த இரண்டு சகோதரிகளின் தந்தையான நிஷான் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.
அஸர்பைஜானில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்த மாணவிகள், தீ விபத்தில் விஷ வாயுவை சுவாசித்தமையினால் உயிரிழந்தனர்.
பிலியந்தலயை சேர்ந்த 23 வயதுடைய மல்ஷா சன்தீபனி, அவரது சகோதரியான 21 வயதுடைய தாரகி அமாயா மற்றும் கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய அமோத்யா மதுஹன்சி ஆகிய மூவருமே உயிரிழந்தனர்.
இவர்களின் இறுதிக் கிரியைககள் ஹோமாகம, தியகம மலர்சாலையில் நடைபெறும் என மாணவிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.