Canada

வெளிநாட்டில் மலையேற்றத்திற்கு சென்ற கனேடிய இளைஞருக்கு நேர்ந்த பயங்கர விபத்து!

அமெரிக்காவில் மலையேற்றத்திற்கு சென்ற கனேடிய இளைஞர் ஒருவர் 500 அடி உயரத்திலிருந்து விழுந்தும் ஆச்சரியப்படும் விதமாக உயிர் தப்பினார்.

அமெரிக்காவின் Oregon மாகாணத்திலுள்ள பனி நிறைந்த Mount Hood என்ற மலைப்பகுதி மலையேற்றத்திற்கு புகழ்பெற்றதாகும்.  கனடாவின் வான்கூவரைச் சேர்ந்த குர்பாஸ் சிங் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் அப்பகுதிக்கு மலையேற்றத்திற்காக சென்றுள்ளார்.

 

 

அப்போது மலை முகடு ஒன்றின் விளிம்பில் சென்றுகொண்டிருந்தபோது பனியில் சறுக்கி 500 அடி கீழே சென்று விழுந்துள்ளார் சிங். அவரை மீட்பதற்காக சென்ற மீட்புக்குழுவினருக்கு, அவர் இருந்த இடத்தைச் சென்றடைய நான்கு மணி நேரமும், அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து கீழே கொண்டுவருவதற்கு நான்கு மணி நேரமுமாக மொத்தம் எட்டு மணி நேரம் ஆகியிருக்கிறது.

 

 

அங்கிருந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் Portlandஇலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தும், அவருக்கு தொடை எலும்பு முறிவைத்தவிர வேறு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

 

 

உடனடியாக கனடாவிலிருந்து மகனைப் பார்க்கச் சென்ற குர்பாஸ் சிங்கின் தந்தையான ரிஷம்தீப் சிங், தனது மகனுக்கு தொடை எலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும், அதன் பிறகும் தொடர்ந்து அவர் மலையேற்றத்திற்கு செல்ல இருப்பதாகவும், இந்த விபத்து அவரை எதிர்காலத்தில் மலை ஏறுவதிலிருந்து தடுக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top