Canada

ஸ்கார்பாரோ அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் இறந்துள்ளார்.

ஸ்கார்பாரோ அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு பெண், குளியல் தொட்டியில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டபோது அதிர்ச்சியின் தெளிவான அறிகுறிகள் இருந்தன

இன்று  அதிகாலை 3:05 மணிக்கு வோர் டன் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ வடகிழக்கில் 25 பே மில்ஸ்   Boulevard  இல் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 18 வது  மாடியில்  தீ விபத்து ஏற்பட்டது

தீ அணைப்பு துறையினரும் துணை மருத்துவர்களும்   வந்தபோது 18 வது மாடியில் உள்ள மாடி படியின்  வெளிப்புறத்திலிருந்து தீப்பிழம்புகள் தெரிந்தன. அவர்கள் ஒரு பெண்ணை குளியல் தொட்டியில் இருந்து  வெளியே இழுத்து எடுத்தனர்.  அப்போது பெண்ணிடம் அதிர்ச்சியின் தெளிவான அறிகுறிகள் இருந்தன .

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி அளித்த பின் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

கான்ஸ்ட். தீ மற்றும் பெண்ணின் மரணம் இரண்டையும் போலீசார் சந்தேகத்திற்குரியதாக கருதுகின்றனர் என்றும், இந்த சம்பவம் குறித்து படுகொலை துப்பறியும் நபர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் விக்டர் குவாங் கூறினார்.

இந்த சம்பவம் நடந்ததிலிருந்தே குடியிருப்பாளர்களுடன்  போலீசார்   வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top